சில மாவட்டங்களில் அடிக்கடி மழை! வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்தோடு, வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த வெப்பநிலை
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்றும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |