கட்டுநாயக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி! உணவகமொன்றில் புழுக்களுடன் வழங்கப்பட்ட பிரைட் ரைஸ்
மினிவான்கொடை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற மட்டக்களப்பை சோந்த குழு ஒன்றுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் புழு நெளிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (19) பதிவாகியுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பிரயாணித்த குழுவொன்று மினுவான்கொடை பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த உணவகம் ஒன்றில் சம்பவதினமான இன்று புதன்கிழமை வாகனத்தை நிறுத்தி மதிய உணவை கோரியுள்ளனர்.
உணவில் புழுக்கள்
இதனையடுத்து வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நெளிந்து ஓட தொடங்கியதை கண்டு உணவக உரிமையாளர் கவனத்துக்க கொண்டுசெல்லப்பட்டதுடன் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த உணவகம் அமைந்துள்ள அந்த பிரதான வீதியால் பயணிக்கும் அதிகமான பொதுமக்கள் அந்த உணவகத்தினை உணவுக்காக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |