தனது நண்பனின் மறைவால் கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ..
அமெரிக்க நடிகரான மேத்யூ பெர்ரியின் திடீர் உயிரிழப்பு தனக்கு பாரிய அதிர்ச்சியாக இருந்தாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி தனது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது அமெரிக்க மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Friends என்ற தொடர் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி, '17 Again' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு
இந்தநிலையில், பெர்ரியின் வீட்டுப்பணிப்பாளர் வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வந்து பார்த்துள்ளார், அதன் போது பெர்ரி வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் குறித்த பணிப்பாளர் 911 இற்கு அறிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டுள்ளனர்.
இதன்போது, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில் பள்ளித் தோழனான மேத்யூவின் மரணம் தன்னை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மேத்யூ பெர்ரியின் மறைவு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
நாங்கள் விளையாடிய பள்ளிக்கூட விளையாட்டுகளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். உலகெங்கிலும் உள்ள மக்கள் அவர் தந்த மகிழ்ச்சியை ஒருபோதும் மறக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரியும். எங்களை எல்லாம் சிரிக்க வைத்ததற்கு நன்றி மேத்யூ. நீங்கள் நேசிக்கப்பட்டீர்கள், உங்களை நாங்கள் இழக்கிறோம்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்