பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு..! மீண்டும் உருப்பெறும் வரிசையுகம்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
National Fuel Pass
By Kiruththikan
பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலை உருவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நீண்ட மின்வெட்டு - எரிபொருள் வரிசை

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி