பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது : அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய நிலையில் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) இன்று (03) இதனை தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண திருத்தங்களுக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள சூத்திரத்திற்கு அமையவே, கட்டணங்கள் திருத்தப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலையில் மாற்றம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் 4 சதவீதத்திற்கும் அதிகமானதாக இருந்தால் மாத்திரமே பேருந்துக் கட்டணத்தை திருத்த முடியும்.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு அந்த எல்லைக்குள் இல்லை என்பதால், பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் பேருந்துகள் சேவையில் இருந்து விலகுவதாக கூறுவதில் எவ்வித நியாயமும் இல்லை.
அவ்வாறு கூறி ஒரு சில பேருந்துகள் சேவையில் இருந்து விலகினாலும், ஏனைய பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |