எரிபொருள் விலைத் திருத்தம் : சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Petrol diesel price
By Sathangani
a year ago
சினோபெக் நிறுவனம் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
எனவே, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 356 ரூபாயாக குறைந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 423 ரூபாயாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலைத் திருத்தம்
ஓட்டோ டீசல் 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 356 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுப்பர் டீசல் 14 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 431 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

