விரைவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும்?
srilanka
price
fuel
By Sumithiran
இலங்கையில் விரைவில் எரிபொருள் விலை அதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு குறித்து கடந்த 23ஆம் திகதி மத்திய வங்கி உயரதிகாரிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடந்தது.
இச்சந்திப்பில், எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய வங்கி அதிகாரிகள் முன்வைத்திருப்பதாக அறியமுடிகின்றது. எனினும் அரசாங்கத்தின் இறுதி முடிவு இன்னும் வெளிவரவில்லை.
அவ்வாறு விலை அதிகரிப்புக்கு அரசாங்கம் பச்சைக்கொடி காட்டினால் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்