அமைதி ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைப்பிடியுங்கள்: அமெரிக்கா- ஈரானுக்கு வலியுறுத்தல்
அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையில் புதிதாக அறிவிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை வரவேற்று, அந்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம், வலியுறுத்தியுள்ளது.
பிராந்தியம் முழுவதும் பகைமைகளை உடனடியாக நிறுத்துமாறும் அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
அதிகாரபூர்வ அறிக்கை
இதன் அதிகாரபூர்வ அறிக்கையின்படி,

"ஒப்பந்தத்தின் விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, பிராந்தியத்தில் உடனடியாகவும் முழுமையாகவும் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அமைச்சகம் வலியுறுத்துகிறது.
அது, அரசின் இறையாண்மை மற்றும் நல்லுறவுக் கொள்கைகளை மதிக்க வேண்டும்.
சர்வதேச சட்டத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தல், கடல்வழிப் பாதைகளைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் ஆகியவை பேணப்பட வேண்டும்.
மத்தியஸ்தப் பேச்சுவார்த்தை
இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்தியஸ்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பிற தரப்பினரின் முயற்சிகளுக்கு அமைச்சகம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.
இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தவும், நீடித்த விளைவுகளை அடையவும் பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டும்.
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவதற்கும், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த பகைமைகளை முடிவுக்குக் கொண்டு வருவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |