வடக்கு சுற்றுலாத்துரையின் எதிர்கால திட்டமிடல்! ரஷ்ய தூதுவர் கோரிக்கை
ரஷ்யச் சுற்றுலாவிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் தெரிவித்துள்ளார்.
எனினும், வடக்கு மாகாணத்துக்கான ரஷ்யச் சுற்றுலாவிகளின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு வரும் ரஷ்யப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் தனது சுற்றுலாத் திட்டங்களை முன்னெடுப்பது சிறப்பாக அமையும், எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனை, வடக்கு மாகாண ஆளுநரை நேற்று (05.01.2026) மாலை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பாதுகாப்பான சூழல்
இதன்போது கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண ஆளுநரை
“இந்தியாவுடனான நேரடி விமான சேவை காரணமாக அதிகளவான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருகின்றனர்.

வடக்கு மாகாணமானது சுற்றுலாவிகள் தங்கிச் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான சூழலைக் கொண்டுள்ளது.
இதனைத் தாங்கள் ரஷ்ய மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் வருகையை அதிகரிக்க உதவ வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக ரஷ்ய முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறும் ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, ரஷ்ய கலாசார நிலையம் ஊடாக இலங்கையர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்துத் தெளிவுபடுத்திய தூதுவர், இவ்வாய்ப்புகளை வடக்கு மாகாண மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |