தமிழக தேர்தலுக்கு முன்னர் கஜேந்திர சந்திப்புகளின் சென்னை மிசன்!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களுக்குள் வரவுள்ள நிலையில் அந்தக் களத்தில் மீண்டும் ஒருமுறை ஈழத்தமிழர்களின் அரசியல் ஊறுகாய் போல தொடப்படும் காட்சிகள் வருகின்றன.
அந்தவகையில் பொன்னாடை போர்ப்பு உட்பட்ட காட்சிகளில் இதுவரை அதிகம் ஈர்க்கப்படாத கஜேந்திரன்களின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்பார்த்த தமிழ்த் தேசியப் பேரவை முகங்கள் நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் அதிமுக எடப்பாடியார் நாம் தமிழர் சீமான் உட்பட்ட முகங்களை சந்தித்து ஈழத்தமிழர்களுக்கு சமஸ்டி வழங்குமாறு டெல்லிக்கு சென்னை அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை அதன் வெளியுறவு கொள்கை சார்ந்த விடயங்கள் மத்திய அரசுக்குரியதாக உள்ள நிலையில் மாநிலங்களுக்கு வழங்கபட்ட உரிமைகளையே ஆளும் பாஜக பறிப்பதாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக தனது விமர்சனங்களை இறுக்கி வருகிறது.
இந்நிலையில், ஈழத்தமிழர்களுக்கு சமஸ்டி வழங்குமாறு டெல்லிக்கு சென்னை அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரப்படுவது ஒருவகையில் தலைச்சன் பிள்ளைக்காரிக்கு இடைச்சன் பிள்ளைக்காரி பிரசவம் பார்த்தாளாம் என்ற பழமொழியை நினைவூட்டும் நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 4 மணி நேரம் முன்