கஜேந்திரகுமாரின் வீட்டை சுற்றிவளைத்த கும்பல்! களமிறங்கிய இராணுவம் (காணொளி)
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் உள்ள இல்லத்தின் முன்பாக இன்றும் பதற்றநிலை எற்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், இன்றைய தினமும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையதின ஆர்ப்பாட்டம்

நேற்றையதினம் தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடு இருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் அங்கு காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
இதனனத் தொடர்ந்து அங்கு பதற்றநிலை உருவாகிய போதும் சிறிது நேரத்தில் காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த நிலையில், இன்றும் அங்கு ஆர்ப்பாட்டக்குழுவொன்று அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், குறித்த பகுதிக்கு காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் பதற்றநிலை இன்றைய தினமும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இல்லத்தின் முன்பாக சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஆர்ப்பாட்டம்.@GGPonnambalam@skajendren
— Selvarajah Kajendren MP (@skajendren) August 26, 2023
photo credit @Meerasrini pic.twitter.com/UXNpPFD9M8