நாம் எதிரானவர்கள் அல்ல - கஜேந்திரகுமார் எம்.பி இடித்துரைப்பு
தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான இன்றைய சந்திப்பின்போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கிறோம். ஆனால் அதன் வழியான 13 ஆம் திருத்தச் சட்டமூலத்தை தீர்வாக ஏற்க முடியாது.
இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு கவசமாகவே இருக்கும்.
நாம் இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பூகோள அரசியல் போட்டியின் பகடைகளாக இலங்கையின் வடகிழக்கு பகுதியை இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்குவதை நாம் எதிர்க்கிறோம்.
இதனால் பாதிக்கப்படப்போவது எமது மக்களே,
இருப்பினும் சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றார்.