அரசாங்கம் மீது அமைச்சர் கம்மன்பில கடும் தாக்குதல்
பணத்தை அச்சடித்து நிவாரணம் வழங்குவதால் ஏற்படும் பணவீக்கம் குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
மேலும், அரசின் வருவாய் அதிகரிக்கப்படாவிட்டாலோ அல்லது இதர செலவினங்களை குறைக்காவிட்டாலோ பணம் அச்சடித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
இன்று இந்நாட்டு மக்கள் பாரிய பணவீக்கத்தை எதிர்நோக்கி வருவதாகவும், குறைந்த வருமானம் பெறுபவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பொய்யான விசித்திரக் கதைகளைச் சொல்லாமல் மக்களுக்கு உண்மையானவற்றை தெரிவித்தால் மக்கள் நிலைமையை புரிந்துகொண்டு எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், அவ்வாறானதொரு மனநிலையை ஏற்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்றார்.
வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.