பங்குகளை விற்பனை செய்த கம்மன்பில? அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பங்குகளை விற்பனை செய்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் சாட்சியம் பதிவு செய்வதற்காக அவுஸ்திரேலிய பிரஜைகள் மூன்று பேருக்கும் அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வௌிவிவகார அமைச்சினூடாக இந்த அறிவித்தலை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று உத்தரவிட்டார்.
போலி ஆவணத்தை பயன்படுத்தி, அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி யுவான் அபேவிக்ரம முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை சாட்சி விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார்.