கம்பஹா வலயங்களில் உள்ள பாடசாலைகளில் விசேட வேலைத்திட்டம் : பிரசன்ன ரணதுங்க

Gampaha Sri Lanka Prasanna Ranatunga Sri Lankan Schools
By Beulah Dec 12, 2023 12:55 AM GMT
Report

கம்பஹா மற்றும் மினுவாங்கொடை வலயங்களில் உள்ள பாடசாலைகளில் உள்ள அபாயகரமான கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது, எனவே அத்தகைய பாடசாலைகளின் பட்டியலை உடனடியாக வலயக் கல்வி அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நேற்று(11) நடைபெற்ற கம்பஹா கல்விக் கட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு சர்வதேசம் காட்டியுள்ள சிவப்புக்கொடி :அபாய அறிவிப்பு என்கிறார் பீரிஸ்

இலங்கைக்கு சர்வதேசம் காட்டியுள்ள சிவப்புக்கொடி :அபாய அறிவிப்பு என்கிறார் பீரிஸ்

பாடசாலைகள் அபிவிருத்தி

மேலும் அவர் அறியத்தருகையில்,

கம்பஹா வலயங்களில் உள்ள பாடசாலைகளில் விசேட வேலைத்திட்டம் : பிரசன்ன ரணதுங்க | Gampaha School Development Prasanna Ranatunga

“இவ்வாறான பாடசாலைகளை இனங்கண்டு, அடுத்த வருட ஆரம்பத்திற்குள், முன்னுரிமை அடிப்படையில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கம்பஹா கல்வி கோட்டத்திலுள்ள 21 பாடசாலைகளுக்காக உருவாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பட்டயப் பொறியிலாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மினுவாங்கொடை கல்விப் பிரிவிலுள்ள 35 பாடசாலைகளுக்கான பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்துள்ளது.

நான் மேல்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த போது கல்வி அமைச்சராகவும் பணிபுரிந்தேன். அப்போது பல வெற்றிகரமான திட்டங்களை செயல்படுத்தினோம்.

இந்தப் பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட அபிவிருத்தித் திட்டம் இருக்கவில்லை. எனவே, எமது அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொண்டு மினுவாங்கொடை பாடசாலைகளுக்கான அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்தோம்.

இதன் காரணமாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்தன. பொதுவாக இதுபோன்ற திட்டத்தை உருவாக்க சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவாகும்.

எனவே தான் இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையை தொடர்பு கொண்டோம். கம்பஹா கல்விப் பிரிவில் 48 பாடசாலைகள் உள்ளன. தற்போது 21 பாடசாலைகளுக்கு இந்தத் திட்டங்களைத் தயாரித்துள்ளோம். கம்பஹாவிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் விரைவில் இந்தத் திட்டங்களைச் செய்வோம் என நம்புகிறோம்.

அடுத்த வருடம் பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அப்போது பாடசாலைகள் தாங்கள் பெறும் பணத்தை அதிகம் பயன்படுத்த முடியும். அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் “எமது பாடசாலை - எமது கரங்களால் காப்பாற்றுவோம்” என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் மினுவாங்கொடையில் உள்ள 17 பாடசாலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கும் சிறிய திருத்தப்பணிகளுக்கும் பணம் கொடுத்தோம். எதிர்காலத்தில் கம்பஹா பிரதேசத்தில் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்" என்றார்.

சோலார் பெனல்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பிரகாரம் கம்பஹா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கான சோலார் பெனல் நிறுவும் வேலைத்திட்டமும் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கம்பஹா வலயங்களில் உள்ள பாடசாலைகளில் விசேட வேலைத்திட்டம் : பிரசன்ன ரணதுங்க | Gampaha School Development Prasanna Ranatunga

மினுவாங்கொடை கல்விப் பிரிவில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. கம்பஹா கல்விப் பிரிவிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் குணவர்தன, மேல்மாகாண சபைத் தலைவர் சுனில் விஜயரத்ன, கம்பஹா வலயக் கல்விப் பணிப்பாளர் அனுர பிரேமலால், கம்பஹா கோட்டக் கல்விப் பணிப்பாளர் பிரியந்தி நாணயக்கார, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) என். ஏ. எஸ். என். நிஸ்ஸங்க உள்ளிட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கம்பஹா பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024