எரிவாயு தட்டுப்பாடு - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் தற்போது எரிவாயுவிற்கு காணப்படும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று, எதிர்வரும் புதன்கிழமை(11) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலா 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவரும் 2 கப்பல்களுக்கான கட்டணம் நாளை(09) செலுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்திய கடன் வசதியின் அடிப்படையில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக 120 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத்தவிர, எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியின் நிதி உதவியின் கீழ், 70 மில்லியன் டொலர் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
