ஆசிரியர்களின் விடுதியில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு
teacher
residence
explore
gas stove
By Sumithiran
நல்லதண்ணியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட முர்ரே தோட்டத்திலுள்ள முர்ரே தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்கள் தங்கும் விடுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக நல்லதண்ணியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நல்லதண்ணி பிரதேசத்தில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக நல்லதண்ணியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆசிரியை குடியிருப்பில் வசிக்கும் திருமதி ஸ்டீவன் பிரசிடா கூறுகையில், காஸ் ஸ்ரவ் செயலிழந்தபோது பலத்த சத்தத்துடன் வெடித்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
வெடிப்பு சம்பவம் தொடர்பில் நல்லதண்ணியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி