காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் பலி!
இஸ்ரேல் காசா மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500 ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் 100ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் தரை வழியாகவும் வான் வழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.
இந்த தாக்குதலில் இது வரையில் 5000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கால அவகாசம்
இந்நிலையில் தங்கள் பாதுகாப்பிற்காக மக்கள் இடம்பெயர்ந்தும், வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தும் வருகின்றனர்.
காசா பகுதியிலிருந்து மக்கள் வெளியேற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் விமான படை பலஸ்தீன் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
Israel just bombed the Baptist Hospital killing 500 Palestinians (doctors, children, patients) just like that. @POTUS this is what happens when you refuse to facilitate a ceasefire & help de-escalate.
— Rashida Tlaib (@RashidaTlaib) October 17, 2023
Your war and destruction only approach has opened my eyes and many… https://t.co/mZYoifT7bj
குறித்த தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை ஹமாஸ் நிர்வாகத்தின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.