காசாவில் கடும் பஞ்சம் : உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்
United Nations
Israel
Israel-Hamas War
By Raghav
இஸ்ரேல் (Israel) ஹமாஸ் (Hamas) மோதலால் காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations) தெரிவித்துள்ளது.
இதனால், காசாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா மீதான முற்றுகை
காசா மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், காசாவுக்கான உணவு விநியோகத்தைத் தடுப்பதனை, போருக்கான ஆயுதமாக தாங்கள் பயன்படுத்தவில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை கான் யூனிஸில் உள்ள நாசர் வைத்தியசாலை வளாகத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி