ரணில் வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்
அதிபர் ரணில் விக்ரமசிங்க பல அமைச்சுக்களை திருத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
திங்களன்று (ஜூலை 31) திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலில், சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் தேசிய இயந்திர நிறுவனம் ஆகியவை நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் முன்னர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இருந்தது. அதே நேரத்தில் தேசிய இயந்திர நிறுவனம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்தது.

விவசாய அமைச்சரின் மேற்பார்வை
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நாட்டில் கால்நடை தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம் பயிரிடுவதை விவசாய அமைச்சர் மேற்பார்வையிடுவார்.
திரிபோச உற்பத்திக்கு தேவையான மக்காச்சோளம் மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்ச்செய்கையை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் இனி மேற்பார்வையிட மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
