ரொஷான் ரணசிங்கவின் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்த போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பை மேன்முறையீட்டு நீதிமன்றில் வைத்து இன்று(13) அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மனு அழைக்கப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்த நிலையிலேயே தற்போதைய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட மனு தொடருமா? இல்லை? மேலும், வரும் 15ம் தேதி அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |