பாணின் எடை குறித்து வெளியான வர்த்தமானி
ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணின் எடையைக் காட்சிப்படுத்தல்
தயாரிக்கப்பட்டவை, பொதி செய்யப்பட்டவை, சேமிக்கப்பட்டவை, விற்பனைக்கு வழங்கப்பட்டவை, காட்சிப்படுத்தப்பட்டவை, சில்லறை அல்லது மொத்தமாக விற்கப்பட்டவை என அனைத்து வகையான பாண்களும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான எடைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்துகின்றது.
அத்துடன் பாணின் எடை தெளிவாக காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்துமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சந்தையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் தரப்படுத்தலை ஊக்குவிப்பதன் மூலம் நுகர்வோருக்கு பயனளிக்கின்றதாக வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |