வெற்றியின் இரகசியத்தை உடைத்த யாழ் இரட்டையர்கள் !
தற்போதைய இளைய தலைமுறையினரிடையே சமூக வலைத்தளப் பாவனை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதாக அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் (G.C.E A/L Exam) உயிரியல் பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் இந்துக்கல்லூரி மாணவன் ஜமுனானந்தா பிரணவன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சொல்லாயுதம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாணவன், “தற்போது உயிரியல் துறையும் பொறியியல் துறையும் பிரபலமான துறைகளாக இருப்பதனாலும் அப்பாவைப் பார்த்தும் நான் உயிரியல் துறையை தெரிவுசெய்தேன்.
மாவட்ட நிலையில் முதல் ஐந்து இடங்களுக்குள் வர வேண்டும் என நினைத்துப் படித்தேன். முதலிடம் பெற்றது சந்தோசமாக இருக்கின்றது.
வீட்டினை விட பாடசாலை தான் கற்றலுக்கு பொருத்தமான சூழலாக இருப்பதுடன் எங்களுடைய பாடசாலையில் நிறைய ஆய்வுகூட வசதிகளும் காணப்படுகின்றன.” என தெரிவித்தார்.
குறித்த மாணவரின் தந்தை யாழ் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) பிரதிப்பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
