க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 பெறுபேறுகள் : பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.
இந்த பரீட்சைக்கு 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியிருந்ததுடன், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
விடைத்தாள் திருத்த பணிகள்
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்து வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |