திட்டமிட்டு காய் நகர்த்தும் சுமந்திரன்: கடுமையாக நிராகரிக்கும் தேசிய மக்கள் சக்தி
இலங்கையில் 2015ல் ஏற்பட்டது போன்ற தேசிய அரசாங்கம் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அவ்வாறு மைத்திரி ரணில் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற்றால் அவர்களுக்கு ஆதரவு வழங்கியது போன்று தேசிய மக்கள் சக்திக்கும் ஆதரவு வழங்குவோம் என்ற நிலைப்பாடு சுமந்திரனிடம் உள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் ஹரிணி (Harini Amarasuriya) தேசிய அரசாங்கம், சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) அமைச்சு பதவியெல்லாம் வெறும் கட்டுக்கதை என்பதை போல கூறியுள்ளார்.
மேலும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவையே அமைக்கப்படும் எனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
2015 ற்கும் 2020 பொதுத்தேர்தலுக்குமிடையில் ஏற்பட்ட நகர்வினால் ஏற்பட்ட விளைவுகளை கண்டாலும், இம்முறையும் அதைத்தான் செய்வோம் என்ற நிலைப்பாட்டிலே சுமந்திரன் தரப்பு உள்ளது.
2015 ல் தேசிய பட்டியல் உட்பட 16 ஆசனங்களை வடக்கு கிழக்கில் கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, நல்லாட்சிக்கு ஆதரவு அழித்தன் பின்னர் 2020 தேர்தலில் தேசிய பட்டியல் உட்பட 10 ஆசனங்களையே பெற்றனர்.
இதற்கமைய 2015 ற்கும் 2020 ற்கும் இடையில் பெரும் வாக்கு வீழ்ச்சியை தமிழ் தேசிய கூட்டடைப்பு எதிர்நோக்கியது.
எனவே இந்த பொதுத்தேர்தலிலும் தமிழரசு கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் வீழ்ச்சியடையும் என்றே ஊகிக்கப்படுகின்றது.
மேலும் சுமந்திரனின் கதைகளை தேசிய மக்கள் சக்தியினர் கடுமையாகவே நிராகரிக்கின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |