ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த மன்னிக்க முடியாத துரோகம்! ஜெனிவா வாக்கெடுப்பில் பின்வாங்கியதன் பின்னணி இதுதான்
srilanka
geneva
human
rights
By Vasanth
ஜெனிவா பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே இந்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய வைகோ, இல்லையேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்றும் கடுமையாக பேசியுள்ளார்.