நவாலி தேவாலயத்தில் புக்காரா விமானங்கள் நிகழ்த்திய இனப்படுகொலை….

Sri Lanka Army Sri Lankan Tamils Chandrika Kumaratunga Sri Lanka
By Theepachelvan Jul 09, 2024 04:05 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

அண்மையில்கூட வானத்தில் ஒரு விமானம் பறக்கும் இரைச்சல் சத்தம் கேட்ட வேளையில் ஓரு திடீர் அச்சம் வந்து மறைந்தது. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளை கடந்த பிறகும் அதன் தாக்கம் ஈழ நிலத்தில் தீராமல்தான் இருக்கின்றது.

சிறிலங்காவின் அதிபர்களை ஏற்றிய உலங்குவானூர்தி கிளிநொச்சி வானத்தில் பறக்கும் போதெல்லாம் அவை குண்டுகளை வீசிய நினைவுகள் தான் வந்து மறைகின்றன.  இந்த தாக்கம் எப்போது தீரும் என்று தெரியவில்லை.

ஆனால் இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய அரசு இன்னமும் அதற்கான நீதியை வழங்காமல் மெளனித்தே இருக்கிறது.

இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !

இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !

நவாலிப் படுகொலை நினைவுநாள்

வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது.

நவாலி தேவாலயத்தில் புக்காரா விமானங்கள் நிகழ்த்திய இனப்படுகொலை…. | Genocide By Pukhara Planes At Navali Church

புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட  எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா.

இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை. ஜூலை 9,  1995ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அப் படுகொலையின் நினைவுநாள் இன்று.  

நவாலிப்படுகொலை நடைபெற்று  இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் முன்னாள்அதிபர் சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அந்தப் படுகொலை இடம்பெற்றபோது அதிபராக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இருபத்து ஆண்டுகளின் பிறகு, யாழ்ப்பாணத்தில் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார்.

யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்

யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்

மறக்க முடியாத வடு

உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்கள் எவராலும்  மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது.

நவாலி தேவாலயத்தில் புக்காரா விமானங்கள் நிகழ்த்திய இனப்படுகொலை…. | Genocide By Pukhara Planes At Navali Church

1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.

கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன.

யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீது கொட்டி வெறி தீர்த்தன.  

அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…

அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…

147பேரை காவு கொண்ட தாக்குதல்

இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச்  செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது. இந்த இனப்படுகொலைத் தாக்குதலில்147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள்.

நவாலி தேவாலயத்தில் புக்காரா விமானங்கள் நிகழ்த்திய இனப்படுகொலை…. | Genocide By Pukhara Planes At Navali Church

சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.  உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு.

அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம்.

இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.

இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….

இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….

இனப்படுகொலையை புனித யுத்தமெனும் அரசு

இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு.

நவாலி தேவாலயத்தில் புக்காரா விமானங்கள் நிகழ்த்திய இனப்படுகொலை…. | Genocide By Pukhara Planes At Navali Church

நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் சந்திரிக்கா கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்த பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் -  தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும்.

 நவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலிசின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.

இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலிசென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும்  அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள்.

தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன்

தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன்

சந்திரிகா அரசின் விமானத்தாக்குதல்கள்

போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள்.  அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர்.

எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது.   சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை.

நவாலி தேவாலயத்தில் புக்காரா விமானங்கள் நிகழ்த்திய இனப்படுகொலை…. | Genocide By Pukhara Planes At Navali Church

சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள் மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சேக்கள் குண்டுகளை கொட்டினர்.

போரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை. இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது. இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன் அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு வேண்டும்.

அத்தடன் நவாலி இனப்படுகொலை உள்ளிட்ட படுகொலைகளுக்கு சிறிலங்கா அரசு மன்னிப்புக் கோர வேண்டும். நடந்த அநீகளை ஏற்றுக்கொள்ளாதவிடத்து எந்தவொரு நிலையான தீர்வையும் காணும் சூழல் ஏற்படாது.

இப்படியே காலம் நீளுமெனில் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தப் படுகொலைகளை வடுக்களை சுமந்தபடி இந்த நாட்களை கடப்போம். மீண்டும் மீண்டும் புக்காரக்கள் எம்மீது குண்டுகளை வீசியபடியே இருக்கும்.

இன ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்த்தும் யாழ் நூலக எரிப்பு

இன ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்த்தும் யாழ் நூலக எரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024