ஹெரோயின் ஊசி நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு - யாழில் சம்பவம்
அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வைத்திய பரிசோதனைக்குப் பிறகு இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் , போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர்.
இந்நிலையில் இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (28) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
அதுமட்டுமல்லாமல் இன்னுமொரு நபரும் போதைக்கு அடிமையான நிலையில் , உடலில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.