தாந்தாமலை முருகன் ஆலயப் பகுதியில் ஜேர்மன் பிரதி உயர்ஸ்தானிகர் கள ஆய்வு
மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டதும், கிழக்கு மாகாணத்தில் “சின்னக் கதிர்காமம்” எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலயப் பகுதிக்கு இலங்கைக்கான ஜேர்மன் பிரதி உயர்ஸ்தானிகர் சாரா ஹசல்பார்த் (Sarah Hasselbarth) களவிஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்படி இன்று (24.06.2026) குறித்த பிரதேசத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கள விஜயத்தின் போது, அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் வரலாற்று, தொல்பொருள் சார்ந்த உண்மைத்தன்மைகள் குறித்து அவர் நேரடியாகக் கேட்டறிந்தார்.
காணி தொடர்பான விடயங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விஜயத்தின் போது போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் வி. மதிமேனன், முன்னாள் மாகாண காணி ஆணையாளர் க. குருநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆலயத்தைச் சூழவுள்ள தொல்பொருள் மற்றும் காணி தொடர்பான விடயங்கள் குறித்தும், அவற்றால் உள்ளூர் மக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 11 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்