உடனடியாக இந்த நாட்டைவிட்டு வெளியேறுங்கள் - ஜேர்மனி வெளியிட்டுள்ள அவசர அறிக்கை!
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஐ.நா. தடைகளைத் தூண்டுவதில் ஜேர்மனியின் பங்கிற்கு ஈரான் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம் என்ற அச்சத்தில் ஈரானை விட்டு வெளியேறுமாறு ஜேர்மனி தனது நாட்டினரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரான் மீது சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை மீண்டும் விதிப்பதற்கான 30 நாள் செயல்முறையை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தொடங்கின.
ஈரானின் அணுசக்தித் திட்டம்
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் மீது குண்டுவீசித் தாக்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை பதட்டங்களைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரானிய அரசாங்க பிரதிநிதிகள் பலமுறை மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் எதிர் நடவடிக்கைகளால் ஜேர்மன் நாட்டினர் பாதிக்கப்படுவார்கள் என்பதை நிராகரிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தற்போது, தெஹ்ரானில் உள்ள ஜேர்மன் தூதரகம், நேரிடையாக சேவைகளை வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

