நாட்டில் உச்சம் தொட்ட இஞ்சி விலை...!
Nuwara Eliya
Ginger
Sri Lanka
Hatton
By Shalini Balachandran
உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோவின் விலை 2,000 ரூபாய் வரை சடுதியாக அதிகரித்துள்ளது.
ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் இந்த விலையேற்றம் குறித்துத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
வழமையாக ஒரு கிலோ 300 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இஞ்சியானது, தற்போது 1,500 முதல் 2,000 ரூபாய் வரையான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இஞ்சிச் செய்கைகள்
டித்வா புயலினால் இஞ்சிச் செய்கைகள் அழிவடைந்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் பச்சை இஞ்சிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றமையே இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.

சந்தையில் ஏற்பட்டுள்ள இத்தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்