கைபேசியால் வந்த வினை - ரயில் மோதி பலியானார் யுவதி
கைத்தொலைபேசியை காதில் வைத்து கதைத்துக் கொண்டு தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம் பெண் ரயில் மோதி பலியான துயர சம்பவமொன்று இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு ரயில் மோதுண்டு பலியான பெண்ணின் சடலம் பாணந்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
அடையாளம் காணப்படவில்லை

கறுப்பு நிற டெனிம் பாவாடை மற்றும் மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த 22 வயதுடைய பெண் அடையாளம் காணப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இரவு 7.00 மணியளவில் மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதம் பாணந்துறை நிலையத்திலிருந்து பின்வத்தை நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம்

இறந்த பெண்ணை அதே ரயிலில் வாதுவ புகையிரத நிலையத்திற்கு கொண்டு சென்று 1990 நோயாளர் காவு வண்டிமூலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக வாத்துவ ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.