உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்திய அதிபர் ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Government of Uganda World Economic Crisis
By Sathangani Jan 22, 2024 03:25 AM GMT
Report

உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை முன்னரெப்போதையும் விட தற்போது எழுந்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பரிஸ் கழகம் மற்றும் லண்டன் கழகம் என்பவற்றினால் உலகளாவிய கடன் தீர்வு தொடர்பில் ஆதிக்கம் செலுத்தும் உலகிற்கே நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி உகந்தது என்றும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

உகாண்டாவின் கம்பாலா நகரில் நேற்று (21) ஆரம்பமான 77 மற்றும் சீனா 3ஆவது தென்துருவ நாடுகளின் உச்சி மாநாட்டில்  உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

“G77 மற்றும் சீனா” மாநாடு 

இந்த மாநாட்டில் மாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழு உரை வருமாறு..

3ஆவது தென்துருவ நாடுகளின் மாநாட்டை நடத்தி, “G77 மற்றும் சீனா” குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனிக்கும் உகாண்டா அரசாங்கத்திற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

கடந்த ஆண்டில் “G77 மற்றும் சீனா” குழுவிற்கு வழங்கப்பட்ட பயனுள்ள மற்றும் உறுதியான தலைமைக்கு கியூபாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்திய அதிபர் ரணில் | Global Financial Structure Needs To Restructured

‘தற்போதைய வளர்ச்சிக்கான சவால்கள்’ என்ற தலைப்பில் கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்-கனெலினால் 2023 செப்டம்பரில் ஹவானாவில் கூட்டப்பட்ட அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவும் ஹவானா பிரகடனத்தை நிறைவேற்றவும் பங்களிக்க முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

G77 மற்றும் சீனா குழு உருவாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வளர்ந்து வரும் நாடுகளின் மிகப்பெரிய குழுவாக ஒன்றிணைந்து செயற்படுவதும் , நாம் எதிர்கொள்ளும் பல சவால்களை சமாளிக்க உலகளாவிய தெற்கின் நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்துவதும் இன்றியமையாதது.

G77 மற்றும் சீனாவின் ஸ்தாபகக் கொள்கைகளான ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் தடைகளின் நிலையான குறைப்பு என்பன நாம் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய உறுதியான அடித்தளத்தை உருவாக்குகின்றன.

அமெரிக்க விமான தளம் மீது திடீர் தாக்குதல்

அமெரிக்க விமான தளம் மீது திடீர் தாக்குதல்

சர்வதேச கடன் தீர்வு மாதிரி

இன்று உலகம் பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் வேளையில் நாம் இங்கு சந்திக்கிறோம். மோதல்களின் அதிகரிப்பு, தொற்றுநோய்களின் விளைவுகள், காலநிலை தொடர்பான இயற்கை பேரழிவுகள் மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பலவற்றினால் இந்த நிலைமைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

வளர்ந்து வரும் இந்த நிலைமைகள், G77 உறுப்பு நாடுகளின் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரங்களில் சமமற்றதாகவும் பாதகமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், உலக நிதிக் கட்டமைப்பை முன்னெப்போதையும் விட இப்போது மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசரத் தேவை உள்ளது.

உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்திய அதிபர் ரணில் | Global Financial Structure Needs To Restructured

பரிஸ் கழகம் மற்றும் லண்டன் கழகம் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட உலகத்திற்கே நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி மிகவும் பொருத்தமானது. இன்று, உலகளாவிய கடன், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் கடன், பரிஸ் கழகம் மற்றும் சர்வதேச பிணைமுறிச் சந்தையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

கையிருப்பிலிருக்கும் நிதி வளங்களை கடன் சேவைகளாகப் பெற்றுக்கொள்ளும் போது பொதுத் தேவைகள், மனித அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆகியவற்றுக்குத் தேவையான செலவுகளுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இதனால் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இந்த விடயம் தாக்கம் செலுத்துகிறது.

தற்போது காணப்படும் பொது வரைவு விரைவில் கடன் தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு போதுமானதாக இல்லை. மேற்படி வரைவு மற்றும் நடைமுறையில் காணப்படும் பொருத்தமற்ற தன்மைகள் காரணமாக இலங்கை உள்ளடங்கலாக நமது நாடுகள் அனைத்தும் அரச கடன் நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கான முயற்சிகளை தாமதிக்க வேண்டியுள்ளது.

நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல்: கவனத்தில் கொள்ளப்படவுள்ள விடயங்கள்

நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல்: கவனத்தில் கொள்ளப்படவுள்ள விடயங்கள்

டுபாய் COP28 மாநாடு

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் அவற்றுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைதலுக்காக தென் துருவ நாடுகளின் தேவைகளைத் தீர்ப்பதற்கான செயற்பாடுகளில் உலக நிதிக் கட்டமைப்பில் பாரிய தோல்விகளைக் காணக்கூடியதாக உள்ளது.

காலநிலை நிதி ஒத்துழைப்புக்கள் தொடர்பில் பல்வேறு உலக கலந்துரையாடல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை தற்போது வரையில் ஏற்படவில்லை.

உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்திய அதிபர் ரணில் | Global Financial Structure Needs To Restructured

டுபாய் COP28 மாநாட்டில் காலநிலை வெப்ப வலய முன்மொழிவைச் சமர்பித்தோம். அரச நிதியளித்தல் செயற்பாடுகளின் குறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் எமது கடல் மற்றும் வன, வளங்கள் உள்ளிட்ட உலக அளவிலான பொது வளங்களை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அந்த முன்மொழிவு சமர்பிக்கப்பட்டது.

இன்றளவில் உலக வர்த்தக ஒழுங்குபடுத்தலுக்குள் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் வளங்களின் அளவு குறைவதுடன் சுற்றாடல் பாதிப்பை மட்டுப்படுத்துதல், பாதிப்புக்களை தவிர்த்தல் போன்ற பாதுகாப்பான எண்ணக்கருக்களுடன் கூடிய எழுச்சியைக் காண முடிகிறது.

உலக வர்த்தக கட்டமைப்புக்குள் ஒருதலைப்பட்சமான மாற்றங்கள் நிகழக்கூடாது. அவ்வாறான தீர்மானங்களை ஒன்று அல்லது இரண்டு தலைநகரங்களை மாத்திரம் மையப்படுத்தியதாக மேற்கொள்வதை விடுத்து பலதரப்பு கலந்துரையாடல் ஊடாகவே செய்ய வேண்டும்.

நாம் உலக பொருளாதாரம் மற்றும் முதலீடுகளின் இலகுத் தன்மை, உயர்ந்தபட்ச செயற்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். G77 அமைப்பு இந்த செயற்பாடுகளை பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்!

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்!

உகாண்டா அதிபருக்கு நன்றி  

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றுமொரு நெருக்கடியாக அமைந்திருக்கிறது. “தொழில்நுட்ப மாற்றம், உற்பத்தி திறன் ஆகியன, மூலதனத்தை மிகவும் தீவிரமாக்கியுள்ளதுடன் குறைந்தபட்ச உழைப்பையை எதிர்பார்க்கிறது” என்ற ஜோசப் ஸ்டிக்லிடிஸின் கருத்து அதனை சரியாக விளக்குகிறது.

உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்திய அதிபர் ரணில் | Global Financial Structure Needs To Restructured

அதற்காக உலக நிதி கட்டமைப்பின் மறுசீரமைப்பை வலியுறுத்தும் அதேநேரம், G77 மற்றும் சீனா உள்ளிட்ட குழுக்கள் எமது அங்கத்துவ நாடுகளுக்கு, வலுசக்தி மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம், பசுமை பொருளாதாரம் மற்றும் புதிய உலக பொருளாதாரத்திற்காக பயிற்றுவிக்கப்பட்ட தொழில் படையைத் தயார்படுத்த வேண்டும்.

இலங்கை, G77 மற்றும் சீனா உள்ளிட்ட குழுக்கள் இணைந்து, நீதியானதும், சட்டத்திற்கு மதிப்பளிப்பதும், சமத்துவமானதுமான உலகிற்கான நோக்கை அடைந்துகொள்ளவும் பல தரப்பு கூட்டுத் தேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய தலைமைத்துவத்தை ஏற்றுகொண்டிருக்கும் யொவேரி முசேவேனியின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எனது உத்தியோபூர்வ விஜயத்தின் போது உகாண்டா அதிபர் எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் அளித்த சிநேகபூர்வமான வரவேற்புக்கு நன்றி கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்.” என்று அதிபர் தெரிவித்தார்.

பணயக் கைதிகளை அடைத்து வைத்திருந்த சுரங்கம் கண்டுபிடிப்பு: இஸ்ரேல் இராணுவம் அதிரடி

பணயக் கைதிகளை அடைத்து வைத்திருந்த சுரங்கம் கண்டுபிடிப்பு: இஸ்ரேல் இராணுவம் அதிரடி



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Kloten, Switzerland

06 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலாக்கா, Malaysia, Kuala Lumpur, Malaysia, சரவணை, கந்தர்மடம், London, United Kingdom

08 Dec, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Paris, France, Melbourne, Australia

11 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, மன்னார்

10 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

07 Dec, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Montreal, Canada

20 Dec, 2023
மரண அறிவித்தல்

அநுராதபுரம், மீசாலை கிழக்கு

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, கொழும்பு

09 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, Lewisham, United Kingdom, கொழும்பு

02 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024