இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
Sri Lankan Peoples
Weather
By Dhilak
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (22) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
அத்தோடு, நாட்டின் மற்றைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவுவதாக கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துக்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்