ஞானசாரதேரரின் காவியுடை களைவு அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் :எச்சரிக்கும் கம்மன்பில

Udaya Gammanpila Galagoda Aththe Gnanasara Thero NPP Government
By Jaso Oct 07, 2026 11:49 AM GMT
Report

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சீவரம் அகற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்தச் செயல் மூலம் அரசாங்கம் பாரதூரமான தவறை இழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஞானசார தேரரை சிவில் உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது குறித்து கருத்து தெரிவித்த கம்மன்பில, அந்தச் செயல் சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் சசான மரபுகளுக்கு முரணானது என்றும் கூறினார்.

 எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை

இது தொடர்பாக எதிர்காலத்தில் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஞானசாரதேரரின் காவியுடை களைவு அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் :எச்சரிக்கும் கம்மன்பில | Gnanasara Removal Uniform Gammanpila

சிறைச்சாலை திணைக்களத்தின் நிரந்தர உத்தரவு 550 ஆம் பிரிவின்படி, குற்றவாளி அல்லது சந்தேகநபர் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, அவர் தனது சாதாரண உடையில் வர அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, ஒரு பிக்குவின் சாதாரண உடை சீவரம் என்பதால், அதை அகற்றி நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது சட்டத்திற்கு எதிரானது என்பதே அவரது வாதம்.

ஞானசார தேரரின் பிக்குத்துவத்தை ஒருபோதும் பறிக்க முடியாது

“இந்த நாட்டில் மன்னர்கள் கூட காவி உடைக்கு தலைவணங்கினர். தவறுதலாக ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தைப் பெற்ற மதச்சார்பற்ற பழங்குடியினர் குழுவொன்று, 2300 வருடங்களாக இந்த நாட்டில் இருக்கும் சசான வரலாற்றை மாற்ற நாம் அனுமதிக்க முடியாது,” என்று கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

ஞானசாரதேரரின் காவியுடை களைவு அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் :எச்சரிக்கும் கம்மன்பில | Gnanasara Removal Uniform Gammanpila

ஞானசார தேரரின் சீவரத்தை அரசாங்கத்தால் அகற்ற முடிந்தாலும், அவரது பிக்குத்துவத்தை ஒருபோதும் பறிக்க முடியாது என்று அவர் கூறினார்.

சீவரம் அணியாத போதும், ஞானசார தேரர் நீதிமன்ற மண்டபத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் உட்பட அனைவரும் வழக்கம் போல் அவருக்கு வணக்கம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னைய வழக்குகளில் கூட காவியுடை களையப்படவில்லை 

ஞானசார தேரருக்கு முன்னரும் வழக்குகள் இருந்ததாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் சீவரம் அகற்றப்பட்டு சிவில் உடையில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை என்றும் கம்மன்பில நினைவுபடுத்தினார்.

ஞானசாரதேரரின் காவியுடை களைவு அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் :எச்சரிக்கும் கம்மன்பில | Gnanasara Removal Uniform Gammanpila

ஒரு பிக்குவின் சீவரம் அவர் பராஜிகம் ஆனபோது மட்டுமே அகற்ற முடியும் என்றும் அவர் கூறினார். அவர் விளக்கியபடி, ஒரு பிக்கு திருட்டு, பாலியல் அத்துமீறல் அல்லது கொலை தொடர்பாக சட்டத்தால் குற்றவாளி என அறிவிக்கப்படும்போது பராஜிகம் ஆகிறார். அப்போது சீவரம் அணிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பிக்குத்துவம் ரத்தாகிவிடும் என்பதே அவரது கருத்து.

ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : சபையில் பொங்கியெழுந்த திலித் ஜயவீர

ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : சபையில் பொங்கியெழுந்த திலித் ஜயவீர

அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம்

“நீதிமன்றத்தில் எழுந்து அனுமதி இல்லாமல் பேசுவது பராஜிகத்திற்கு காரணம் என்று சட்டப் புத்தகத்திலோ, பௌத்த நூல்களிலோ இல்லை,” என்றும் அவர் கூறினார்.

ஞானசாரதேரரின் காவியுடை களைவு அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் :எச்சரிக்கும் கம்மன்பில | Gnanasara Removal Uniform Gammanpila

நலிந்த ஜயதிஸ்ஸ உட்பட அரசாங்கப் பிரதிநிதிகள் இது தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை கம்மன்பில விமர்சித்தார். கார்ல் மார்க்ஸின் புத்தகங்களைப் படித்து, பௌத்த நூல்களைப் படிக்காதவர்களால் அத்தகைய கருத்துக்களைக் கூற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ அரசாங்கத்திடம் நாங்கள் கூறுகிறோம், அவர்கள் தவறிழைத்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் தான் நேற்று நடந்தது என்று நாங்கள் பயமின்றி கூறுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை - சரத் வீரசேகர சீற்றம்: கொழும்பில் வெடிக்கும் போராட்டம்

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை - சரத் வீரசேகர சீற்றம்: கொழும்பில் வெடிக்கும் போராட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025