கொழும்பில் ஒன்று குவிந்த பௌத்த தேரர்கள் - அடி பணிய வைக்கமுடியாது! கடும் சீற்றத்தில் ஞானசார தேரர்

srilanka colombo thero protes gnanasara
By Vasanth Mar 16, 2021 09:54 AM GMT
Report

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக இனி கடுமையான நடவடிக்கைகளை நாடுதழுவிய ரீதியில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து முன்னெடுப்போம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர சதுக்க வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய அவர், நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் எடுத்துரைத்துள்ளோம்.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அனைத்து அரசாங்கங்களும் அடிப்படைவாதத்தை வளரத்து எம்மை இனவாதிகளாக சித்தரித்தது.அனைத்து தரப்பினரது பலவீனத்தன்மையும் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலாக வெளிப்பட்டது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் உக்கிரத்தன்மையினை வெளிப்படுத்தியது. குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்தது யார் ? எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க முன்னெடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் ஆரம்பகால செயற்பாடுகள், விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெற்றன.ஆனால் ஆணைக்குழுவின் செயற்பாட்டின் இறுதி பகுதி அரசியல்மயப்படுத்தப்பட்டன.தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏதும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.

மாறாக தனிப்பட்ட முரண்பாடுகளுக்கு பழி தீர்க்கும் ஒரு களமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செயற்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பௌத்த அமைப்புக்களை தடை செய்யும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் வரலாற்று ரீதியில்.

இடம்பெற்றுள்ளன. அறிக்கைகளுக்கு பௌத்த அமைப்புக்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டில் இனவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் பௌத்த அமைப்புக்கள் ஒருபோதும் செயற்படவில்லை.பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இனவாத செயற்பாடு என குறிப்பிட முடியாது.

மத கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை அரசாங்கத்துக்குள் அரசியல் பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது.

பௌத்த நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் பொறுப்பினை பௌத்த மத தலைவர்கள் அனைவரும் ஒன்றினைந்த ஏற்க வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு முன்nவைத்துள்ள யோசனைகளுக்கு மகாநாயக்க தேரர்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் .

அனைத்து மத தலைவர்களையும் ஒன்றினைத்து நாடு தழுவிய ரீதியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான கடுமையான நடடிவடிக்கைகளை இனி முன்னெடுப்போம்.

பாரம்பரிய முஸ்லிம் மக்களின் உரிமைளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. இஸ்லாமிய மத போர்வையில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படைவாதத்துக்கு எதிராகவே செயற்படுகிறோம். இதற்கு பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினரும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025