தனக்கு எதிராக போராட்டம் செய்ய இடம் ஒதுக்கி கொடுத்த ரணில்..!
Ranil Wickremesinghe
Sri Lankan protests
President of Sri lanka
Go Home Ranil
By Kanna
போராட்டக்காரர்கள் தமது "கோ-ஹோம்-ரணில்" போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தினை மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கத்தையும், நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த ரணில் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி