புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் : அமைச்சர் அதிரடி
புதிய இணைப்பு
இறுதி யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுமக்களின் மீட்க்கப்பட்ட தங்கத்தை அவர்களிடம் கட்டாயம் ஒப்படைப்போம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (03) யாழில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தங்கங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால், அதனை ஒரு பொது நிதியத்தில் சேகரித்து அந்த பொது நிதியத்திற்கு அரசாங்கத்தினால் மேலும் நிதி போட்டு குறித்த வடக்கு பிரதேசத்தை கட்டியெழுப்புவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தங்கம், அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை, தேர்தல் நடவடிக்கை மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இறுதி யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுமக்களின் மீட்க்கப்பட்ட தங்கத்தை அவர்களிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்ல (Battaramulla) இராணுவ தலைமையகத்தில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பதில் காவல்துறை மா அதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி என்பனவற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை ஊடாக மதிப்பிடப்பட உள்ளது.
இதையடுத்து, அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் (Central Bank of Sri Lanka) ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்பு, அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
