அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரிக்கு தங்கப்பதக்கம்
Jaffna Hindu College
Colombo
By Theepan
அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகளில், *தனிநடிப்புப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது.
இன்று(19) கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகளில், *தனிநடிப்பு மூன்றாம் பிரிவில்* யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த *தேவானந்த் அஸ்வின்ராம்* முதலாம் இடத்தைப் பெற்று, தேசிய ரீதியாக *தங்கப்பதக்கத்தை* வென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமை
இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், வடக்கு மாகாணத்திற்காக தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

தேசிய மட்டத்தில் பெற்ற இவ்வெற்றி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |