தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,701.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் இன்று (13) தங்க விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 363,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் இன்று ஏற்றத்தைக் கண்டுள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 86.22 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |