கோல்ப் வீரர்களா நீங்கள்? சாம்பியன்ஷிப் தொடரில் இணைய அரிய வாய்ப்பு w8
golf
championship
inaugural
By Vanan
தமிழ் கோல்ப் சங்கத்தினர், கோல்ப் சாம்பியன்ஷிப் நிகழ்வை பிரித்தானியாவின் ஸ்டான்மோர் கோல்ப் கழகத்தில் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளனர்.
60 இற்கும் மேற்பட்ட கோல்ப் விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்ற இந்த சாம்பியன்ஷிப் தொடர் மிகவும் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.
இந்தப் பெருமை மிகு நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இது சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக மாறும் எனவும், இதில் பங்குபற்ற - இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடன் பதிவு செய்து வாய்ப்புகளை தக்கவைக்குமாறும் பல பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன், தமிழ் கோல்ப் சங்கத்தினரின் பக்கத்தில் உங்கள் விருப்பை தெரிவிப்பதுடன் மற்றவர்களுக்கும் பகிர்ந்து ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி