வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு
                                    
                    Douglas Devananda
                
                                                
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Sri Lanka Fisherman
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    வடக்குமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் தீர்வு
"தேசிய கடற்றொழில் தினத்தினை இன்று கடற்றொழில் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் கொண்டாடியுள்ளனர்l, கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன்

வடக்கு மாகாண கடற்றெழிலாளர்களுக்கு
பாதீட்டில் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு என ரூபாய் 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இதற்காக நான் இந்த நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வடமாகாண கடற்றொழிலாளர் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்" என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்