வெளிநாடொன்றில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
சைப்ரஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இராஜதந்திர சேவைகளை வழங்குவதற்காக ஜூலை 20 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சைப்ரஸில் இலங்கை தூதரகம் ஒன்றை நிறுவ வெளியுறவு அமைச்சு முடிவு செய்துள்ளது.
சைப்ரஸ் அரசு தூதரகத்தைத் திறப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தூதரகத்தில் செயல்பாடுகளைத் தொடங்க அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு ஜூலை 15 ஆம் திகதி சைப்ரஸுக்குப் புறப்பட உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள்
இந்த முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், சைப்ரஸில் வசிக்கும் இலங்கையர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே, சைப்ரஸில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அலுவலகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சமூகத்திற்கு சேவைகள் வழங்கப்படும் என்றும், வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தவும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையர்களின் கோரிக்கை
சைப்ரஸில் தற்போது சுமார் 15,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு, சைப்ரஸில் முன்னர் செயல்பட்டு வந்த தூதரகம் மூடப்பட்டதால், இலங்கையர்கள் துருக்கியின் அங்காராவில் உள்ள தூதரகத்திலிருந்து இராஜதந்திர சேவைகளைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் தலையீட்டால், புதிய அரசாங்கம் சைப்ரஸில் உள்ள இலங்கையர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவும், இந்த இராஜதந்திர பணியைத் தொடங்கவும் முடிகிறது என்று வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
