வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
Sri Lankan Peoples
Flight
Foreign Employment Bureau
By Sumithiran
அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் மானிய விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கான ஒரு சாளரம் திறக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இந்த சாளரம் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தலைமையில் நேற்று(16) திறந்து வைக்கப்பட்டது.
மானிய விலையில் விமான டிக்கெட்டுகள்
அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மானிய விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் எந்த நாட்டிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் அனைத்து தொழிலாளர்களும் சாதாரண சந்தை விலையை விட குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை இங்கு பெற்றுக்கொள்ளமுடியும்

அநுரவிற்கு ஆலோசனை வழங்க உதவி கோரும் அர்ஜூன் மகேந்திரன் : 03 வருடங்களுக்கு பின்னர் வெளியான புகைப்படம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்