தங்க விலையில் அதிரடி மாற்றம் : இன்றைய விலை நிலவரம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கமைய, இலங்கையிலும் இன்று (24) தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளது.
இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபாய் வீழ்ச்சியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த வாரம் 17ஆம் திகதி 408,000 ரூபாயாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று (24) 370,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இன்றைய விலை நிலவரம்
அதேவேளை, கடந்த வாரம் 17ஆம் திகதி 375,300 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 340,400 ரூபாயாகக் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றுடன் (23) ஒப்பிடுகையில் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,344 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |