இலங்கையிலும் குறைவடைந்த தங்க விலை : வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
இலங்கையிலும் இன்று (15) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்றையதினம் 395,000 ரூபாயாக காணப்பட்ட 24 கரட் தங்கம் இன்று 1000 ரூபாயால் குறைவடைந்து 394,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 363,400 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கம் இன்று 1000 ரூபாயால் குறைவடைந்து 362,400 ரூபாயாக பதிவாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,612.61 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
இது கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் 64.75 டொலர்களால் வீழச்சியடைந்த நிலையில் 1.38 வீத வீழ்ச்சியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை
இதேவேளை வெள்ளியின் விலையிலும் இன்று பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.33 டொலர்களினால் குறைந்து, 81.4 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்கள் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |