சுரேஷ் சாலே கைது : திடீரென சிங்கப்பூர் பறந்தார் கோட்டாபய
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதும், கோட்டாபய ராஜபக்ச, SQ 463 விமானத்தில் சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் பயணத்தால் வெளிக்கிளம்பிய சந்தேகம்
கோட்டாபய ராஜபக்சவை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிடாத நிலையிலும் அவர் சிங்கப்பூருக்கு திடீரெனப் புறப்பட்டுச் சென்றுள்ளமை பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கிலேயே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சுரேஷ் சாலேவைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |