சீருடைகளை அணிவதற்கு இராணுவத்தினருக்கு தகுதி இல்லை! போராட்டக்கள பெண் ஆவேசம்(காணொளி)
உங்களை நினைக்க அவமானமாக உள்ளது. உங்கள் சீருடைகளை அகற்றுங்கள் அதை அணிவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் இல்லை என காலிமுகத்திடல் போராட்டக்கள பெண் ஒருவர் காவல் பணிப்பாளர்களிடம் கூறியுள்ளார்.
அதிபர் செயலகத்தில் உள்ள போராட்டகாரர் மீது இன்று படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பில் போராட்டக்கள பெண் ஒருவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில்,"வெட்கமாக இருக்கிறது உங்களை நினைப்பதற்கு நாங்கள் இங்கு புத்தகத்தை தான் பாதுகாக்கிறோம் குண்டு வீசவில்லை.
நீங்கள் இங்கு நடப்பதை பார்த்து கொண்டு தானே இருக்கின்றீர்கள். நீங்கள் எங்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தினீர்கள் எங்களால் மூச்சு எடுக்க முடியாமல் இருந்ததது.
ஆனால் நாங்கள் இந்த கட்டிடத்தை பாதுகாத்தோம். வேறு ஒன்றும் செய்யவில்லை. உங்களை நினைக்க அவமானமாக உள்ளது. உங்கள் சீருடைகளை அகற்றுங்கள். அதை அணிவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் இல்லை” என கூறியுள்ளார்.
முப்பது ஆண்டு யுத்தம்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொது மகன் ஒருவர்,“எனது தந்தை ஓய்வு பெற்ற இராணுவ வீரர். அவர்கள் 30 ஆண்டு யுத்தம் செய்தனர். ஆனால் அவர்கள் அமைதியாக போராடியவர்களை தாக்கவில்லை.
தற்போது போராட்டக்காரர்கள் வைத்தியசாலையில், அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை புத்தகத்தை தான் பாதுகாத்தனர்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்
