தொலைபேசியில் அச்சுறுத்தினார் கோட்டாபய - ஆளும்கட்சி எம்.பி பரபரப்பு தகவல்
தனக்கு இன்றையதினம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் இழிவான மற்றும் அச்சுறுத்தும் வகையில் ஆத்திரமடைந்து பேசியதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்லேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் கீழ்த்தரமாக என்மீது குற்றம் சுமத்தினார். ஜனாதிபதி ஒருவருக்கு பொருத்தமற்ற மிகவும் ஆத்திரத்துடன் ஆவேசமாகவும் கீழ்த் தரமாகவும் திட்டினார்.
இதனால், ஜனாதிபதி என்னிடம் பேசிய மொழியிலேயே அவருக்கு பதிலளித்தேன். விருப்பமின்றி அதனை செய்ய நேரிட்டது. எனது குடும்பம் மற்றும் பிள்ளைகள் குறித்து அச்சமாக இருப்பதாகவும் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரு தனி நாடு ஒன்றுக்கான சகல அம்சங்களுடன் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூல ஆவணத்தில் காணப்படுவதாகவும் இதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காமல் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.