கோட்டாபயவின் வேண்டுகோளை ஏற்க மறுத்த சட்டமா அதிபர் எடுத்த முடிவு?
கனடாவுக்கான தூதுவர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சட்டமா அதிபர் தப்புர டி லிவேரா அரசியலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடிய உயர்ஸ்தானிகர் பதவியை ஜனாதிபதி அவருக்கு வழங்கியபோது அதனை சட்டமா அதிபர் ஏற்க நிராகரித்துவிட்டார்.
ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் தாம் பொதுமக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றவே எதிர்பார்ப்பதாகவே கூறியிருக்கின்றார்.
இதுசம்பந்தமாக ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியபோது சட்டமா அதிபர் விரைவில் அரசியலில் பிரவேசிக்கவிருப்பதை ரணில் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நெருக்கமான சிலரும் இதனை சிலரிடம் கூறியிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநேகமாக சட்டமா அதிபர், சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.